

BLACK PEPPER 100G (மிளகு | 100G)
BLACK PEPPER - KOLLI HILLS
மிளகு | 100G |
Non-returnable
₹100.00
Customize
Choose Quantity :
Product Information
Product Details
இந்த மிளகு இருக்குல.. அதுக்கு ஒரு காலத்தில தங்கத்தை விட அதிக மதிப்பு இருந்தது. மன்னர்களுக்குள்ள மிளகுக்காக அடிச்சுக்கிட்டாங்க. மிளகு வாங்கிட்டு போக வந்த வெள்ளைக்காரன் இந்தியாவையே புடிச்சான்...
உணவில காரம் சேர்க்க மிளகாய் ஏற்கனவே புழக்கதில் இருந்த போதும் மிளகுக்கு ஏன் இவ்ளோ டிமாண்ட் இருந்துச்சுன்னா... மிளகுல இருந்த நோய் நீக்கும் தன்மை..! அந்த காலத்தில் மிளகு ஒரு முக்கியமான கிருமி நாசினி..!
உணவில மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் உணவருந்தலாம்ன்னு சித்தர் பாடல் ஒன்னு இருக்கு..! அதாவது உணவில விஷம் கலந்திருந்தாலும் மிளகு அதை முறிச்சுரும்ன்னு அந்த பாடல் சொல்லும். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல் என்றாலும் இன்னிக்கும் மிளகு சேர்த்த உணவுகள் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதால அந்த உணவுகள் ஃபுட்பாய்சன் ஆகாது..!
ஒரு உதாரணத்துக்கு லேசா கெட ஆரம்பிச்சிருக்கும் வீட்டு உணவுகளில் மிளகை தூவி வச்சுட்டீங்கன்னா கொஞ்ச நேரம் ஆனாலும் சாப்பிட முடியும். வயிற்றுக்கு தொந்தரவு செய்யாது...இதெல்லாம் மிளகின் குணங்கள்…
இந்த மிளகு ஒரு சில இடத்துல தான் விளையும். கொல்லிமலை மிளகு விளையும் இடம். அங்க சொந்த தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிச்ச ஏற்றுமதி தரம் வாய்ந்த மிளகை நாங்கள் விற்பனை செய்கிறோம்.