



LADIES FINGER LONG GREEN | வெண்டை நீள் பச்சை
Customize
Product Details
வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும். ஆனால், உணவு செரிமானத்துக்குப் பிறகு, இது கரையா நார்ச்சத்தாக மாறுவதால் குடலைப் பாதுகாப்பதுடன் மலக்குடலில் வரும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்துவதால் ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத் திரவத்தை அருந்தினால் நீரிழப்பு தடுக்கப்படுவதுடன் உடல் குளுமை பெறும். எலும்புகள் வலிமை பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வராமல் தடுக்கப்படும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவது நல்லது.
மாடி தோட்டத்தில் வெண்டை வளர்ப்பது ஏன் சவாலாக இருக்கிறது? | வெண்டையில் நல்ல விளைச்சலுக்கு சில டிப்ஸ்
https://www.youtube.com/watch?v=HeKIpJTIhX0&ab_channel=ThottamSiva