
Pepper Powder 100 Gr | மிளகு பொடி 100 Gr
கொல்லிமலை மிளகு (Kollimalai Pepper) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை பகுதியில் இயற்கையாக வளர்த்தும், பாரம்பரிய முறையில் சாகுபடி செய்யப்படும் ஒரு சிறந்த தரமான மிளகு வகையாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், மருத்துவ குணங்களுக்குமான முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.
கொல்லிமலை மிளகின் சிறப்புகள்:
இந்த மிளகு உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்க, சளி, இருமல், ஜீரண கோளாறுகள் போன்றவற்றுக்கு சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது.
மிளகின் சுவை, வாசனை மற்றும் காற்றுப் பிடிப்பு தன்மை என்பது சாதாரண மிளக்களைவிடவும் அதிகம்.
பசுமை சூழலிலும், மழைக்கான குளிர்ச்சியிலும் விளையக்கூடிய வகை. மலைமரங்கள், புதர்கள் இடையே மரச்சாம்பல் மற்றும் இயற்கை உரங்களால் வளர்க்கப்படுவதால் பாரம்பரிய இயற்கை முறை பயன்படுத்தப்படுகிறது.
Customize
Product Details
சமையலில் மிளகாய்க்கு மாற்றாக மிளகு (Black Pepper) பயன்படுத்து பயன்படுத்த பல காரணங்கள் உள்ளன. இது சுவை, ஆரோக்கியம் மற்றும் சமையல் தேவைகளின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது.
மென்மையான காரம்:
மிளகு, மிளகாயைப் போல அதிகப்படியான காரத்தை கொடுக்காது இதனால், உணவின் இயல்பான சுவையை மேம்படுத்தி, அதிக காரத்தால் உண்டாகும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
அரோமா மற்றும் சுவை:
மிளகு, உணவுக்கு தனித்துவமான வாசனை மற்றும் சுவையை கொடுக்கிறது. இது உணவின் முழுமையான சுவையை உணர உதவுகிறது.
சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு:
· மிளகில் உள்ள பைபெரின் (piperine) என்ற மூலப்பொருள், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
· இது, டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்
சேர்மங்களின் உறிஞ்சுதிறன் அதிகரிப்பு:
மிளகு, மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) போன்ற உட்பொருள்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மாசுபாடுகளை குறைக்கும் திறன்: மிளகு, இறைச்சி போன்ற உணவுகளில் உருவாகும் கார்சினோஜென்கள் (HCAs) போன்ற புற்றுநோய் ஏற்படுத்தும் சேர்மங்களை குறைக்க உதவுகிறது .