



Pure Caster Oil | விளக்கு எண்ணெய் 100 ML
Pure Caster Oil
பாரம்பரிய காய்ச்சி வடித்தல் முறையில் செய்யப்பட்ட தூய்மையான விளக்கெண்ணெய். ₹130.00 ₹150.00
Share :
Product Details
பாரம்பரிய காய்ச்சி வடித்தல் முறையில் செய்யப்பட்ட தூய்மையான விளக்கெண்ணெய்.
விளக்கில் பச்சை கழிவு வராது அந்த அளவுக்கு தூய்மையான தயாரிப்பு. உடலின் உள்ளும் புறமும் உபயோகிக்க ஏற்றது.
செக்கில் ஆட்டும் எண்ணெயில் ஆமணக்கு விதையிலுள்ள நஞ்சு வெளியாகாது. உட்கொள்ள முடியாது. பாரம்பரிய முறையில் காய்ச்சி வடிப்பதால் மட்டுமே உட்கொள்ள இயலும். ஆகவே தான் பாரம்பரிய முறையில் காய்ச்சி வடிகட்டி தயாரிக்கப்பபட்டது உழத்தி விளக்கெண்ணெய்.
பயன்கள்:
1. தலைமுடி பாதுகாப்பு: உழத்தி விளக்கெண்ணெய் 1 பங்கும் சுத்த தேங்காய் எண்ணெய் 3 பங்கும் கலந்து தேய்த்து வர முடி நன்கு வளரும்.
2. உடல் சூடு தணிய: உச்சந்தலை, தொப்புள், கால் விரல்களில் தேய்க்க சில நிமிடங்களிலே குணம் தெரியும். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கும் நபர்கள், ஓட்டுனர்களுக்கு ஏற்றது.
3. கண் சோர்வு நீங்க: கண் இமைகளில் இரு விரல் நுனியில் தேய்த்து வைத்தாலே போதுமானது
4. குழந்தை பெற்ற பெண்களுக்கு: குழந்தை பிறந்து 1-2 மாதங்கள் கழித்து உட்கொள்ள கறர்ப்பை கசடுகள் நீங்கி வயிறு சரிசமமாகும்.
5. பெண்களுக்கு: வயிற்றில் தடவி வரலாம் . மாதவிடாய் பிரச்சனைகளை சரிப்படுத்த உள்ளும் 1-2 தேக்கரண்டி கொடுக்கலாம்
6. வயிறு உபாதைக்கு: சூடு தண்ணீரிலோ அல்லது நேரடியாகவோ 1-2 தேக்கரண்டி உட்கொள்ளலாம். வயிற்றில் மேல் தடவி வர கர்ப்பக்காலத்தில் விழுந்த கோடுகள் நீங்கி வயிறு அழகாகும்.
7. முகம், உடல் பொழிவு பெற: பச்சை பயிறு மாவுடன் சிறிது உழத்தி விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர பிரகாசமான சொக்கும் அழகு கிடைக்கும்
8. மலச்சிக்கல் நீங்க: சூடு தண்ணீரில் 1-2 தேக்கரண்டி விட்டு தேனீர் போல பருக குடல் கழிவுகள் வெளியேறும்
9. சமையல்: பருப்பு வேக வைக்கும் போதோ தாளிக்கும் போதோ விடலாம். பிரியாணி மற்றும் அசைவம் சாப்பிடும் போது தாளிப்பில் விடலாம். செரிமானப் பிரச்சினைகள் குறையும், கறி நன்றாக வெந்து சுவை கூட்டும்.
10. விளக்கிற்கு: விளக்கு என்றாலே விளக்கெண்ணெய் தான். உழத்தி விளக்கெண்ணெயில் பச்சை கழிவு வராது. விளக்கு பிராகாசிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும், தாம்பத்யம் நன்றாகும். நல்ல வரன் அமையும். தெய்வ அருள் பெருகும்.
Ratings And Reviews


