

Sprouted Ragi Flour 500 Gr முளைகட்டிய ராகி மாவு
Finger Millet / Ragi / Kelvaragu / கேழ்வரகு
Non-returnable
₹65.00
Customize
Choose Quantity :
Product Information
Product Details
கேழ்வரகு - ஒரு வரப்பிரசாதம்
கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
கேழ்வரகில் பினாலிக் மற்றும் ஆன்ட்டி-ஆக்சிடண்ட் ஆகியவை இருப்பதால், முதுமையைத் தடுக்க உதவுகிறது. கொலாஜன் கிராஸ்-லிங்கிங் எனப்படும் மூலக்கூறு குறுக்கு இணைவைத் தடுக்கும் ஆற்றல் கேழ்வரகில் உள்ளது.
100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. பால் பொருட்களை விரும்பாதவர்களுக்கும் கால்சியம் கிடைக்க கேழ்வரகு உதவுகிறது.
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க கேழ்வரகு உதவுகிறது.
கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
கேழ்வரகு பற்றி தவறாக நிலவும் கருத்துக்கள்: உடல் சூடு, குளிர்ச்சி ஆகும் என்ற எதிர்மறை எண்ணங்கள். இவ்வாறு எண்ணம் கொண்டவர்கள் முலை கட்டிய பின் அரைத்த மாவாகவோ அல்லது கேழ்வரகு ஒரு பங்கு நாட்டு கம்பு ஒரு பங்கும் சேர்த்து பதார்த்தங்கள் செய்யலாம். அதாவது சூடும் குளிர்ச்சியும் சேர்ந்து சமநிலை உணவாகும். தயிர் அல்லது மோருடன் உட்கொள்ளும் போது பயன்கள் பன்மடங்காகும்.
தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, தோசை, அப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
முளைகட்டிய கேழ்வரகு மாவு மேலே கூறிய பதார்த்தங்கள் செய்ய மிருதுவாக இருக்கும், சுவை கூட்டும், மற்றும் சத்துக்களை பன்மடங்காக பெருக்கும்.