





முருங்கக்காய் சதை தொக்கு 100 கிராம்|Drumstick Pulp Thokku 100 gram
தேவையான பொருட்கள்
1 முருங்கைக்காய் 10 No 's
2 நல்லெண்ணெய் 250 ML
3 கொத்தமல்லி 1 Spoon
4.புளி - சிறு எலுமிச்சை அளவு
5.வர மிளகாய் - 10 - 15 (காரத்திற்கு ஏற்ப)
6.கடுகு மற்றும் வெந்தியம் - கால்(1/4 ) spoon
7 சின்ன வெங்காயம் - 75 - 100 கிராம்
8 வெல்லம் (அ) நாட்டு சக்கரை
9 கருவேப்பிலை (தாளிக்க)
தயார் படுத்துதல்
1. முருங்கை காய்களை நன்கு கழுவி அரை முழம் அளவில் நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 - 7 நிமிடம் மிதமான வெப்பத்தில் வேக வைத்து கொள்ளவும்
2. வாணலியில் எண்ணெய் விடாமல் மேலே சொன்ன அளவில் வரமிளகாய் கொத்தமல்லி,கடுகு,
வெந்தியம் ஆகியவற்றை குறைந்த வெப்பத்தில் தனி தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்
3. சூடு தண்ணீரில் புளியை ஊற வைக்கவும் 4. சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை குறைந்த வெப்பத்தில் பொன்னிறமாக மாறும்
வரை வதக்கவும்
5. முதலில் மிக்சி ஜாரில் எண்ணெய் விடாமல் வறுத்த வரமிளகாய் கொத்தமல்லி,கடுகு,
வெந்தியம் சேர்த்து நன்கு (நைசா) பொடியாக அரைக்கவும். நன்கு அரைபட்டவுடன் அதனுடன்
வதக்கிய வெங்காயத்தையும்,புளியையும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்..
6. நல்லெண்ணெயில் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி வதக்கிக் கொள்ளவும். பிறகு
கொத்தமல்லி ஒரு ஸ்பூன், கடுகு சிறிதளவு, வெந்தயம் சிறிதளவு ,கருப்பு எள்ளு முக்கால்
ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 10 அனைத்தையும் வறுத்து அரைத்துக்
கொள்ளவும்.
செய்முறை
1. ஒரு இரும்பு வாணலியில் 150ML எண்ணெய் விட்டு (குறைந்த வெப்பத்தில்) வைக்க வேண்டும்)
தாளிக்க கடுகு போட வேண்டும். கடுகு பொறிந்த உடன் பெருங்காயத்தை தூள் மற்றும்
கருவேப்பிலையை போட வேண்டும்..
2. கருவேப்பிலை பொறித்த உடன் மிக்சியில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.. விழுது நன்றாக கொதித்த உடன் முருங்கை சதை பற்றை சேர்த்து கிளறவும்
3. மிதமான வெப்பத்தில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு காய் விடாமல்
கிளறவும்... எண்ணெய் பிரிந்து வரும் பொழுது சிறிது வெள்ளம் அல்லது நாட்டுச்சக்கரை
சேர்த்து கிளறி இறக்கவும்..
4. இப்பொழுது சுவையான,மணமான, ஆரோகியமான முருங்கை சதை தொக்கு தயார்.. இந்த தொக்கை சூடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால் இன்னும் நாலு வாய் சேர்த்து சாப்பிடுவார்கள்... பயணத்திற்கு செல்பவர்களுக்கு கிளறி தருபவர்களுக்கு ஒரு சிறந்த உணவு... தோசை மற்றும் இட்லிக்கு ஒரு சிறந்த side dish .
Out of stock
₹100.00
Customize
GET CONTACT NUMBER
Product Information
Product Details
முருங்கைக்காய் சதை தொக்கு: நல்லெண்ணெயில் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி வதக்கிக் கொள்ளவும். பிறகு கொத்தமல்லி ஒரு ஸ்பூன், கடுகு சிறிதளவு, வெந்தயம் சிறிதளவு ,கருப்பு எள்ளு முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 10 அனைத்தையும் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஏழு எட்டுமுருங்கைக்காய்களை ஆவியில் வேகவைத்து சதைப்பற்றை தனியாக எடுத்து க் கொள்ளவும்.
தாளிக்க: சிறிது நல்லெண்ணெயில் கடுகு கருவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் முருங்கை சதைகளை சேர்க்கவும். பிறகு சிறிது வெள்ளம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் முருங்கை சதை தொக்கு ரெடி .ருசி???