0

Sow Seed technique

ஒரு முறை விதைகளை பெற்று வீட்டுத்தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், அடுத்த முறை விதைப்பிற்கு 
இவற்றிலிருந்தே விதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் வழங்கப்படுகிறது. 
____
சில முக்கிய குறிப்புகள்:
தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்று விட்டு நடவு செய்யும் விதைகளை 3மணி நேரம் 
தண்ணீர் / சாணிப்பாலில் ஊறவைத்து விதைக்கலாம்.
வெண்டை, கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளை ஓர் இரவு ஊறவைத்து விதைக்கலாம்.
பாகல், சுரை, புடலை என கொடி காய்கறி விதைகள் அனைத்தையும் 2-3 நாட்கள் ஊற வைத்து விதைக்கலாம்.
விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய மழைநீர் உகந்தது.

முதல் 2,3 அறுவடைகளையும், கடைசி 2,3 அறுவடைகளையும் விதைக்காக பயன்படுத்த வேண்டாம். 
இடைப்பட்ட காலங்களில் விதைக்காக பயன்படுத்தலாம். 
___
சேகரிக்கும் விதைகளை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். 
காலை மாலை இளம் வெயிலில் காய வைத்து எடுத்து சேமிக்கலாம். 
அமாவாசை நாட்களில் விதைகளை காய வைக்கலாம். இரவிலும் விதைகளை காய வைக்கலாம். 

விதைகளை சேமிக்கும்போது, துணிகளில் கட்டி தொங்கவிடலாம்.  சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்கலாம். 
அவ்வபோது வேப்பிலைகளில் புகை போடலாம்(சாம்பிராணி புகை போல). 

காய்கறிகளை வருடா வருடம் எடுத்து விதைத்து அவற்றிலிருந்து விதைகளை எடுத்து 
சேமிப்பதன் மூலம் விதைகளில் முளைப்புத்திறனை பாதுக்கலாம். 

சுரை,பீர்க்கு,வெண்டை போன்ற விதைகளை குடுவைகளிலேயே சேமிக்கலாம். 
பழமாக மாறிய பின் விதை எடுக்கும் தக்காளி கத்தரி பாகல் புடலை போன்ற காய்களிலிருந்து 
விதை எடுத்து உடன் சாம்பல் கலந்து விதைகளை சேமிக்கலாம்.
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- An error occurred. Please try again later.