




AGATHI KEERAI ( white HUMMING BIRD TREE SEEDS ) (அகத்திகீரை)
Customize
Product Details
எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. பல மருத்துவக் குணங்கள் இந்தக் கீரைக்கு உண்டு. புரதமும் கார்போஹைட்ரேட்டும் ஓரளவுக்கு உள்ளன. இதில் பாஸ்பரஸ் அதிகம் என்பதால், பல் நலன் காக்க உதவுகிறது. வைட்டமின் ஏ சத்தும் இரும்புச் சத்தும் தேவைக்கு உள்ளன. கண்ணுக்கு நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மாலைக்கண் நோய் குணமாகும். ரத்தசோகை நோயாளிகளுக்கு இது உதவும்.
வறட்சியைத் தாங்கி வளரும். இது ஆடு, மாடுகளுக்கு சிறந்த தீவனம் என்றாலும் அகத்தியை நாம் அடிக்கடி உண்ணக் கூடாது. அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை உடலையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்தவே பயன்படுத்துகிறோம். இந்நிலையில் உடலில் இயற்கையாக இல்லாத எல்லா பொருட்களையும் இது வெளியேற்றும் என்பதால் அகத்திக் கீரையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.இதனாலேயே மருந்துகளை உட்கொள்ளும் காலங்களில் இதை சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம். தவிர வாயுவை உண்டுபண்ணும் தன்மையும் அகத்திக்கீரைக்கு உண்டு. என்றாலும் இதில் 63 விதமான சத்துக்கள் இருப்பதால் பத்தியம் முறிக்கும் போது சுண்டைக்காயோடு சேர்த்து அகத்தியை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது. சுண்டைக் காயையும், அகத்தியையும் சேர்த்து உண்ணும் போது உடலுக்கு பத்தியம் / விரதத்துக்குப் பின் நமக்கு தேவையான அனைத்து விதமான விரதம் / பத்தியத்தால் இழந்த சத்துக்களும் திரும்பக் கிடைக்கும் என்கிறது நம் தமிழ் மருத்துவ முறை.