


CORIANDER SEED ( கொத்தமல்லி கீரை)
Customize
Product Details
Growing Tips for Coriander
Thottam Siva YouTube Link for more details
கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் .கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும். இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.
கொத்தமல்லி கஷாயம் :
கொத்தமல்லி(அல்லது) தனியா, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை மற்றும் சதகுப்பை இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு 600 கிராம் கற்கண்டை பொடியுடன் கலந்து வைத்து கொள்ளவும். இவற்றை கஷாயம் செய்து சாப்பிடலாம்.
பயன்கள்: இந்த கஷாயத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லியை நம் உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.
? குறிப்பு: இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.