
KUNDU SURAKKAI ROUND BOTTLE GOURD (குண்டு சுரைக்காய்)
Quantity : 10 - 12 Seeds
Color : Green Type : Creeper
Non-returnable
₹20.00
Customize
Choose Quantity :
Product Information
Product Details
சத்து உணவு சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும். சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் இருக்கின்றன.
இவை அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாகும். உடல்சூடு தணியும் நமது நாட்டில் ஏற்படும் கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.
சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி காய் ஆகும். சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.