

MULAI KEERAI RED ( AMARANTHUS ) (சிகப்பு முளைக்கீரை)
Customize
Product Details
முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.சீதோஷண மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், ஜுரங்கள் போன்றவை குணமாகும்.உடல் வளர்ச்சிக்கு தேவையான பல சத்துகள் முளைக்கீரை கொண்டுள்ளது. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். தங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு முளைக்கீரை சமைத்து சாப்பிட கொடுக்க வேண்டும்.இவைஅல்லாமல் தோல் வியாதிகள், வயிற்று புண்கள் என இதன் பலன்கள் நீண்டுகொண்டே போகும்….