


Red Gram | மர துவரை
Customize
Product Details
துவரையில்உள்ளஊட்டச்சத்துக்கள்
- துவரையில் பி-த்தொகுப்பு விட்டமின்களான பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுக்கள்) அதிகளவும், பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), சி, கே, சோலைன் ஆகியவையும் காணப்படுகின்றன.
- இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.
- மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.
மருத்துவப்பண்புகள் (Medicinal properties)
இரத்தஅழுத்தத்தைசீராக்க (regulate blood pressure)
- துவரையில் உள்ள பொட்டாசியமானது இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கிறது. எனவே துவரையை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கலாம்.
- துவரையானது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தினைக் கொண்டுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
- காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரையை உண்டு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறலாம்.
அனீமியாவைத்தடுக்க (To prevent anemia)
- ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் அனீமியா மற்றும் பிறப்புக்குறைபாடுகள் தோன்றலாம். துவரையானது அபரிதமான ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்டு அனீமியாவை விரட்டலாம்.
எதிர்ப்புஅழற்சிபண்புகள் (Anti-inflammatory properties)
- துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளன. இப்பண்பானது துவரையின் இலைகள், பயறு, பருப்பு எல்லாவற்றிலும் காணப்படுகின்றது.
உடல்எடைகுறைய (Weight Loss)
- துவரையானது குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்புச்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை நீண்ட நேரம் ஏற்படுத்துவதுடன் உடல்வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.
- துவரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடைசெய்கின்றது.
ஆற்றலைப்பெற (To gain energy)
- துவரையில் உள்ள விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் பி3 (நியாசின்) போன்றவை கார்போஹைட்ரேட்டின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
- கொழுப்பு ஆற்றல் சேமிப்பதைத் தடுத்து ஆற்றலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.
- வறண்ட பகுதிகளில் வேலைசெய்பவர்கள் ஆற்றலை விரைவில் இழந்து விடுவர். அவர்களுக்கு துவரை நல்ல பலனைக் கொடுக்கிறது.
நோய்எதிர்ப்புசக்தி (immunity)
- துவரையில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
இதயநலம் (Heart health)
- துவரையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரை உண்டு இதயநலத்தை மேம்படுத்தலாம்.
செரிமானத்தைசீராக்க (To regulate digestion)
- துவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றம் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process.