

THAMATTAI SATTAI AVARAI ( SWORD BEANS ) (சாட்டை அவரை கொடி தமட்டை)
Quantity : 10 seeds
Color : Green Type : Creeper
Non-returnable
₹20.00
Customize
Choose Quantity :
Product Information
Product Details
தம்பட்டை அவரை - அவரைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால் அவரையைவிட அதிக நீளமாக பிரமிப்போடு வளரக்கூடிய ரகமாகும். அவரையில் செடி அவரை, கொடி அவரை இருப்பதுபோல, தம்பட்டை அவரையிலும் செடிதம்பட்டை, கொடிதம்பட்டை, என்று இரண்டு வகைகள் உண்டு. விதைகளை வைத்தே தம்பட்டை அவரையின் இனம் பிரிக்கப்படுகிறது. சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் விதைகள் காணப்படுகிறது.தம்பட்டை அவரை நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய ரகமான காய்கறி வகைகளில், ஒன்றாகும். அதிக வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. வருடம் முழுவதும் காய்த்து பலன் தரக்கூடியது. விதைகள் விதைத்து குறைந்தபட்சம் ஏழிலிருந்து 12-நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும். தம்பட்டை அவரையின் விதைகள் பெரியதாக இருப்பதனால் முளைப்பதற்கு கொஞ்சம் நாட்கள் எடுத்துக்கொள்ளும். தம்பட்டை அவரை பிஞ்சாக இருக்கும் போதே, பறித்து பொரியல் செய்து சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பிற்கும் கூட மற்ற காய்கறிகளை போல பயன்படுத்தலாம். முற்றிய பிறகு விதைகளை, வேக வைத்தோ, அல்லது முளைகட்டியோ, சாம்பார் குருமா போன்றவைகளில் சேர்த்து சாப்பிடலாம். தம்பட்டை அவரை பிஞ்சாக இருக்கும் போதே, பறித்து பொரியல் செய்து சாப்பிடும்போது அசைவ உணவுக்கு இணையான ஒரு சுவையை கொடுக்கக்கூடியது. கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process.
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process.