


THANDU KEERAI RED ( FOXTAIL AMARANTHUS ) (சிகப்பு தண்டுக்கீரை)
Customize
Product Details
இது இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்று ரணம், உள் அழல், மூத்திர கிருச்சிர நோய்களைக் குணப்படுத்த வல்லது. கல்லீரல், நீர்த் தாரையில் அடைபட்ட கற்களை எாித்து விடும் தன்மையுள்ளது. சொிமான சக்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மூளை வளர்ச்சியையும், ஞாபக சக்தியையும் உண்டு பண்ணக் கூடியது. முதுகெழும்பை பலப்படுத்துகிறது. பசியைத் துாண்டக் கூடியது. எலும்பு மஜ்ஜை ( உள் மூளை ) வளர்க்கிறது. இரத்தத்தை சுத்திகாிக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கும் சிறந்தது.
குடல் புண்களை ஆற்றும், கட்டிகளைக் கரைக்கும், இருதய பலவீனத்தைப் போக்கும். இரத்ததில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், மூச்சுக் குழல், குடல் போன்றவற்றி்ல் ஏற்படும் தடைகளை நீக்கவும், பித்தத்தை நீக்கும் சக்தி படைத்தது. மனிதனின் ஆக்ரோஷ குணத்தைப் படிப்படியாகக் குறைக்கவல்லது. குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலாகவோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. அாிசி கழுவிய நீாில் இதன் தண்டைச் சேர்த்து புளி விட்டு மண்டியாகச் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாகும். இது உடல் பலத்தையும், அழகையும், ஒளியையும் கொடுக்கும், மூல நோயைக்கு மிகவும் சிறந்தது.
தண்டுக்கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. தண்டு வெண்ணிறமாக உள்ள கீரையை வெங்கீரைத்தண்டு என்றும், செந்நிறகீரைத்தண்டு என்றும், செந்நிறமாக உள்ள கீரையை செங்கீரைத் தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. செங்கீரைத்தண்டு, வெங்கீரைத்தண்டு ஆகிய இரண்டு வெவ்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதாக மருத்துவ நுால்கள் கூறுகின்றன. செங்கீரைத்தண்டு தீராத பித்த நோயைத் தீர்க்கிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் கண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களின் பெரும்பாட்டையும், உடல் வெப்பத்தையும் குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் வலி சற்று குறையும். கருப்பை கோளாறுகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது. வெங்கீரைத்தண்டு சிறுநீர் பிரச்சிைனகளைத் தீர்க்கிறது. பித்தத்தை அகற்றுகிறது. உடல் வெப்பத்தைத் அதோடு, மேகம், வயிற்றுக்கடுப்பு, மூலம், இரத்த பேதி ஆகியவற்றையும் வெங்கீரைத்தண்டு குணப்படுத்துகிறது. கொழுப்பைக்கரைக்கவும், தேைவயற்ற சதையைக் குறைக்கவும், அதிக உடல் நீரை வெளியேற்றவும் தண்டுக்கீரை பயன்படுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தண்டுக்கீரையை அதிக அளவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.